Sunday, April 19
Shadow

சிம்பு வேண்டுகோள் என் அடுத்த படத்தின் யூகங்களை நிறுத்துங்கள்

சிம்பு கடின உழைப்பால் அதேபோல பலரின் கொவோத்தொடும் ஒரு முன்னணி நடிகராக வந்தவர் ஒரு முன்னணி நடிகராக வர அவரும் அவர் தந்தையும் மிகவும் பாடுபட்டு வந்த இந்த நிலையை ஒரே படம் அவரின் திரையுலக வாழ்கைக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது அன்பானவன் அசரதாவன் அடங்காதவன் தான் என்று சொல்லணும் இனி படங்கள் நடிக்க வேண்டுமா என்ற கேள்விக்குறியை எழுப்பும் நிலைமைக்கு தள்ளிய படம் என்று தான் சொல்லணும்.

சிம்பு நடிப்பில் வெளியான ‘ அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்பு கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை சிம்பு தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் டீஸர் ஒன்றை தயார் செய்து வெளியிடவுள்ளதாகவும், இதில் நாயகியாக அக்‌ஷரா கெளடா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவே நாயகனாக நடித்து, இயக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த தகவல்கள் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எனது அடுத்த படம் பற்றிய யூகங்களை நிறுத்துங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply