கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்
மலையாள சினிமாவுக்கு கேரளத்தை தாண்டியும் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த படங்களை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கொண்டு சேர்க்கும் விநியோக நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த வகையில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை விநியோகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்.
தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மலையாள திரைப்படங்களை கேரளத்திற்கு வெளியே உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
தமிழகத்தில் மலையாள படங்களின் விநியோகத...








