
வரும் சட்டசப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டி. உண்மை உழைப்பு உயர்வு இதுவே மந்திரம் – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு* !
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி கட்சியின் செயல் திட்டங்களை அறிவிப்பேன் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வரை நான் அரசியல் பேசமாட்டேன் – நடிகர் ரஜினிகாந்த்.
பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன் 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா ? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.அரசியல் கெட்டு போய்விட்டது. அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்.
ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதிஇதுகாலத்தின் கட்டாயம் – நடிகர் ரஜினிகாந்த்.
அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன் – நடிகர் ரஜினிகாந்த்.
அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு வருவது எளிதல்ல அது கடலில் மூழ்கி முத்துக்குளிப்பது.பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்களை அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும்.ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து காவலர்களாக மாற்றுவேன் : நடிகர் ரஜினிகாந்த்.
பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லைசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுவேன் – நடிகர் ரஜினிகாந்த்.
பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார் இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும்சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்கட்டுப்பாடு ஒழுக்கம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் -ரஜினிகாந்த்.
கடமையை செய் மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன்.யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள் – நடிகர் ரஜினி.
