நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது.
நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க முடியும்?? ஏன் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்று இடதுசாரிகளை எதிர்த்து இந்த திடீர் தமிழர்கள் என்றாவது கேட்டு இருக்கிறார்களா?
நம் ஆதரவு ரஜினி என்னும் நடிகருக்கு மட்டும் அல்ல. 25 வயது வரை ஒரு பேருந்து நடத்துனராக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து விட்டு, மொழி தெரியாத மாநிலத்தில் தன்னுடைய கருமையான நிறத்துடன் வந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு தான் நம் ஆதரவு.
இந்தியாவில் மிகவும் பிரபலமானத்துறை எது?? ஏன் உலகத்திலேயே மிகவும் பிரபலமானத்துறை எது. கலைத்துறை தானே? 100 கோடி வைத்து இருந்தால், நீங்கள் ஒரு பெரிய கட்சியிடம் சீட்டு வாங்கி, அமைச்சர் ஆகி விடலாம். ஆனால் 1000 கோடி இருந்தாலும், சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வளம் வர முடியுமா? காசு, பணத்தால் நிலைக்க கூடிய பதவியா அது? கடின உழைப்பு மட்டும் இல்லையென்றால் சாத்தியப்பட கூடிய ஒன்றா அது?? அந்த கடின உழைப்பைதான் நாம் ஆதரிக்கிறோம்.
நீ சிறு வயதில் இருந்து அவரையே நேசித்து வருகிறாய், உனக்கு பக்குவம் இல்லையா?? என்று ஒரு நண்பன் கேட்கிறான். நான் ரஜினியுடன் சேர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு நடிகர்களையும் நேசித்து வந்து உள்ளேன் (கார்த்திக், பிரபு இன்னும் பலர்), ஆனால் ரஜினி ஒருவர் தான் இன்றுவரை தமிழ் சினிமாவில் ராஜாவாக உள்ளார். பின், அவரை எதற்காக நாம் வெறுக்க வேண்டும்??
எம்ஜியாருக்கு பிறகு அரசியலில் வந்து தோற்றுப் போன நடிகர்களும், ரஜினியும் ஒன்றா?? சிவாஜி, பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,விஜயகாந்த்(கமல் உட்பட) என்று அனைவரும் மார்க்கெட் போனவுடன் அரசியலுக்கு வந்தவர்கள் . ரஜினி மட்டும் தான் எம்ஜியாருக்கு பிறகு திரையுலகில் ராஜாவாக இருக்கும்போதே அரசியலுக்கு வருபவர். எனவே தயவு செய்து இனிமேல் அவர் ஒரு கூத்தாடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவர் இந்தியாவிலேயே பிரபலமான, வெற்றி பெறுவதற்கு கடினமான ஒரு துறையில், 40 வருடமாக சிங்கமாக இருக்கும் ஒருவர்.(வேறு யாரவது இந்தியாவில் 40 வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்களா??) எனவே அவரையும் மற்ற நடிகர்களையும் ஒப்பிடுவதே மிக பெரியத் தவறு.
வெளிநாடுகளில் எல்லாம் நடிகர்கள் அரசியலில் ஜெயிப்பது இல்லை என்று நண்பன் கூறினான். இவர்கள் எல்லாம் WHATSAPP கோஷ்டிகள். ஹாலிவுட் நடிகர் ரொனால்டுட் ரீகன் 8 வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார். ஏன்?? அர்னால்டு கூட, அமெரிக்காவில் கவர்னராக இருந்து இருக்கிறார். ஆதலால், சினிமாவில் ஜெயித்து, அரசியலுக்கு வருபவர்களை, நீங்கள் கேவலமாக பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.
இறுதியாக, நாங்கள் ஒன்று…
அரசியல்வாதி நிஜத்தில சொன்ன எதையுமே செய்யல,அவனுங்கள எதாவது கேளுங்கடானா,
ரஜினி சினிமால சொன்ன எல்லாத்தையுமே செய்யலடானு புலம்பிட்டு இருக்கானுங்க,
இந்துவாக இருந்தால்
மனதில் நாம் எப்பொழுதும்
இந்தியன் என்ற எண்ணத்தையும்
முஸ்லிமாக இருந்தால் மனதில்
நாம்எப்பொழுதும்இந்தியன் என்ற எண்ணத்தையும்
கிருஸ்துவராக இருந்தால்
மனதில் நாம் எப்பொழுதும் இந்தியன் என்ற எண்ணத்தையும்
நம் மனதில்
விதைத்து கொள்வோம்
தமிழன் கன்னடன் தெலுங்கர் மலையாளி இப்படி மாநில பற்று
அல்லது இன பற்று எல்லை நம்
மனதிற்குள் படர விடாமால்
அட நாம எப்பவுமே இந்தியன்
என்ற பற்றை நம் மனங்களில்பெரிதாக படரவிட்டு கொள்வோம்
நான் இந்த ஜாதி நீ அந்த ஜாதி
நான் மேல் ஜாதி நீ கிழ் ஜாதி என்ற
ஜாதி என்னும் அரக்கனை நம் ஒற்றுமை
என்னும் ஆயுதத்தை கொண்டு
வேறோடு அழிப்போம்
செய்யும் தொழிலால் ஜாதி உறுவாகி
நம்மோடு கலந்து விட்டது
ஒவ்வொருவருக்கும்அவரவர்
தொழிலே தெய்வம்
முடிவெட்டுபவர் செருப்பு தைப்பவர்
சாக்கடையை சுத்தம் செய்பவர் இறப்பிற்கு பிறகு நம்மை நல்அடக்கம்
செய்பவர் என தனக்கு தெரிந்த
தொழிலை செய்யும் யாவருக்கும்
அந்த தெய்வம் தானே…
ஆக தெய்வம் வெவ்வேரு தொழிலால்
நம்மோடு வெவ்வெரு
உருவங்களில் நம்மோடு
உள்ளது என்று தானே அர்த்தம்
ஒரு ரூபாய் நோட்டு எத்தனை கைகள்
மாறிவிடுகிறது ஐயோ நோட்டு தீட்டு
என என்றாவது ஒரு நாள் ஜாதி பார்க்கும் யாரவது ஒதுக்கி வைத்துள்ளார்களா
எனசொல்லுங்கள் பார்க்கலாம்
ஆபத்தில் ஒரு யுனிட் இரத்தம்
நம் உறவு முறைகளுக்கு
தேவைபடும் போது இரத்தம் கொடுத்தது
எந்த ஜாதி என நாம் யாராவது
விசாரித்திருக்கிறோமா?
இல்லவே இல்லை
ஆக நமக்கு ஓர் தேவை என்றால்
ஜாதி இல்லை
நமக்கு தேவைகள் இல்லை என்றால் ஜாதி உள்ளே புகுத்தி கொண்டது
இது தனி மனித காரணம் கொஞ்சம்
நின்று நிதானித்து யோசித்தால்
நல்ல வழி மனதில் பிறந்துவிடபோகிறது
சமூக காரணம் ஒன்று உண்டு
நம்மோடு பயணிக்கும் அரசியல் அது
கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை
ஜாதி கட்சிகள் எத்தனை ஜாதி மத சங்கங்கள் கணக்கே இல்லை
தாத்தா காலத்தில் குறைய வேண்டியது
அப்பா காலத்தில் ஒழிய வேண்டியது
ஆனால் நம் காலத்திலும் காலூன்றி
கிடக்கிறது
ஊசி இடம் கொடுத்தால் தான்
நூல் நுழைந்து விட்டது
ஜாதி கட்சிகள் ஜாதி சங்கள் மதகட்சிகள்
மத சங்களுக்கு இனி மனதில் இடம் தராதீர்கள்
அவர்கள் நம்மை வைத்து தங்களை
பலவிதங்களில் பலபடுத்தி கொண்டனர்
போனது போகட்டும் மனிதனை சக மனிதாக மட்டுமே பார்போம்
மனித நேயம் காப்போம்
ஜாதி மதமற்ற ஒரே குடையின்
கீழ் நாம் இணைய நமக்கனான
நம்மக்களுக்கான மன்றமாக
ரஜினி மக்கள் மன்றம் உருவெடுத்து
கொண்டு வருகிறது
ஒரு தாயின் பிள்ளைகளாக
தாரளமாக கைகோர்த்து கொள்வோம்
வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
ஜெய்ஹிந்த்
நன்றி – Venkat munivel