Sunday, April 19
Shadow

‘காலா’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியீடு

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். ‘கரிகாலன்’ என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் ‘காலா’. ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கமே ‘காலா’.

‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘காலா’ இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவாதகவும் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது என்று படடத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply