
ரெமோ சமீபத்தில் தெலுங்கில் வெளியானது இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றது ஆனால் சில ஊடகங்கள் படம் தோல்வி என்று கூறினார்கள். உண்மையில் படம் மிக பெரிய வசூலை பெற்றது என்று தான் சொல்லணும் காரணம் தமிழிலும் தெலுங்கிலும் இருக்கும் ஒரு சில நாயகர்கள் செய்த வேலை தான் இது என்று சொல்லணும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் ரிலீஸ் ஆகும் முதல் படம் என்பதால் இப்படி முதல் படம் தோல்வி என்று சொன்னால் அடுத்த அடுத்த படங்கள் அங்கு விலைக்கு போகாது என்பதே காரணம் ஆனால் ரெமோ தெலுங்கில் வாங்கிய ராஜுக்கு கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் லாபம் என்பதே உண்மை.
ாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஜயசேதுபதி சில படங்களில் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதை மனதில் கொண்டு சிவகார்த்திகேயனையும் சில டைரக்டர்கள் டபுள் ஹீரோ கதையுடன் அணுகினர். ஆனால் அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதும் கதையைகூட கேட்க மறுத்து விட்டாராம். நான் நடிக்கிற படங்களில் நான் மட்டுமே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் அது நான் வளர்ந்து வந்த நேரம். இப்போது எனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. இந்த இடத்தை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா-2 வில் நடிக்க அழைத்தபோதுகூட அதை நான் ஏற்கவில்லை என்று தனது நிலையை சொல்லி அனுப்புகிறார் சிவகார்த்திகேயன்.
