Thursday, April 25
Shadow

சாவி விமர்சனம்

யதார்த்த தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில நல்ல படங்களும் வந்து செல்வது வழக்கம் தான். சின்ன பட்ஜெட்டில் சின்ன கதாபாத்திரங்களை வைத்து ஒரு நல்ல படத்தை தர வந்திருக்கிறது ‘சாவி’ டீம்.

இக்குழுவின் கனவு நிறைவேறியதா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

படத்தின் நாயகனாக வருகிறார் பிரகாஷ் சந்திரா. சாவி ரிப்பேர் வேலை செய்து வரும் இவருக்கு நாயகி சுனுலக்‌ஷ்மி மீது காதல். ஒருநாள் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பும் போது, தனது நண்பன் அவனது உறவினர்கள் வீட்டு சாவியை தவற விட்டதாகவும் வீட்டை திறந்து உதவுமாறும் அழைக்க பிரகாஷ் சந்திராவும் வீட்டை திறக்க உதவி புரிகிறார்.

மறுநாள் அது நண்பனின் உறவினர் வீடு இல்லை என்பதும், அந்த வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், பிரகாஷ் சந்திராவிற்கு தெரிய வருகிறது.

போலீஸ் நாயகன் பிரகாஷ் சந்திராவை தீவிரமாக தேட, பிரகாஷ் திருடனை தேட… பல திடுக்கிடும் சம்பவங்கள், ட்விஸ்ட்டுகள் அரங்கேறுகின்றன. திருடன் பிடிபட்டானா…??? ஹீரோ தப்பித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை..

நாயனாக வரும் பிரகாஷ் சந்திரா ஏற்கனவே முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இது ஒரு தனி முத்திரை தான்.

திருடனை தேடும் இடத்தில் இவரின் யதார்த்த நடிப்பு பாராட்ட வைக்கிறது. அறம் படத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த சுனுலெட்சுமி இப்படத்தின் நாயகியாக வந்து செல்கிறார். சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் மனதில் பதிகிறார்.

காமெடி டிராக் அதிகம் இல்லையென்றாலும், நாயகியின் தந்தையாக வரும் ஒரு குடிகார கதாபாத்திரத்தில் வருபவர் அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து செல்கிறார்.

நாயகனின் அண்ணன், அவரது நண்பன், தந்தை என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

மிக சிறிய கதை என்றாலும் அதை எடுத்துச் சென்ற விதம் மிகவும் அருமை.
நிச்சயம் அனவராலும் பாராட்டப்படக்கூடிய ஒரு படைப்பு தான் இந்த சாவி.

திரைக்கதை, வசனம் என அனைத்தையும் மிகவும் நுண்ணிப்பாக கவனித்து எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

சேகர் ராமின் கேமரா கிராமப்புற காட்சிகளை கண்முன்னே நிறுத்திச் சென்றிருக்கிறது. சதீஷின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னனி இசை கதையோடு சேர்ந்து பயணித்து வருகிறது கூடுதல் பலம்.

சாவி – தமிழ் சினிமாவிற்கு அவ்வப்போது கிடைக்கும் ஒரு பொக்கிஷம்…

Leave a Reply