
சாவி விமர்சனம்
யதார்த்த தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில நல்ல படங்களும் வந்து செல்வது வழக்கம் தான். சின்ன பட்ஜெட்டில் சின்ன கதாபாத்திரங்களை வைத்து ஒரு நல்ல படத்தை தர வந்திருக்கிறது ‘சாவி’ டீம்.
இக்குழுவின் கனவு நிறைவேறியதா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
படத்தின் நாயகனாக வருகிறார் பிரகாஷ் சந்திரா. சாவி ரிப்பேர் வேலை செய்து வரும் இவருக்கு நாயகி சுனுலக்ஷ்மி மீது காதல். ஒருநாள் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பும் போது, தனது நண்பன் அவனது உறவினர்கள் வீட்டு சாவியை தவற விட்டதாகவும் வீட்டை திறந்து உதவுமாறும் அழைக்க பிரகாஷ் சந்திராவும் வீட்டை திறக்க உதவி புரிகிறார்.
மறுநாள் அது நண்பனின் உறவினர் வீடு இல்லை என்பதும், அந்த வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், பிரகாஷ் சந்திராவிற்கு தெரிய வருகிறது.
போலீஸ் நாயகன் பிரகாஷ் சந்திராவை தீவிரமாக தேட, பிரகாஷ் திருடனை தேட... பல தி...