Sunday, December 8
Shadow

`சக்க போடு போடு ராஜா’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாக நடித்து வருகிறார் சந்தானம்.

அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக
வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து `கலக்கு மச்சான்’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், `காதல் தேவதை’ என்ற வரிகளில் தொடங்கும் அடுத்த சிங்கிள் டிராக் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் டிரைலர் அறிவிப்பு குறித்து போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply