
சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை
சில உணவுகள் வெறும் சுவையோடு நின்றுவிடுவதில்லை; அவை நம்முடைய சிறுவயது நினைவுகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மீண்டும் கண்முன் கொண்டு வந்துவிடும். அப்படியொரு இனிமையான நினைவைத்தான் நடிகை சமந்தா ரூத் பிரபு, Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு எபிசோடில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ள இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில், தனக்குப் பிடித்தமான பாரம்பரிய இனிப்புகள் குறித்துப் பேசிய சமந்தா, சிறுவயதில் ஒரு ரூபாய் கொடுத்து அதிரசம் வாங்கிச் சாப்பிட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார். வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ஒரு ரூபாய் அதிரசத்தை வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகக் காசு சேமித்து, அதை ஆசையுடன் வாங்கிச் சாப்பிட்ட நாட்கள் இன்றும் மனதில் நீங்காமல் இருப்பதாகக் கூறினார். அந்தச் சிறுவயது அனுபவத்தை இப்போது மீண்டும் பெற முடியவில்லை என்றும் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
Endemol Shine India தயாரிப்பில் உருவாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில், திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு சமையல் போட்டிகளில் பங்கேற்று தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த வார தீபாவளி சிறப்பு எபிசோட் பாரம்பரியப் பலகாரங்களையும் அவற்றுடன் தொடர்புடைய நினைவுகளையும் மையமாகக் கொண்டு அமையவுள்ளது.
இந்தச் சிறப்புப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு 90 நிமிடங்களில் நான்கு வகையான இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களைத் தயாரித்து, அழகான தீபாவளிப் பரிசுப் பெட்டியை உருவாக்கும் சவால் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒரு இனிப்பு வகையாவது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள செஃப் வெங்கடேஷ் பட், தனது தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். சிறுவயதில் தீபாவளி என்றாலே பட்டாசுகளும் வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்களும்தான் நினைவுக்கு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தங்கள் வீட்டில் கார்த்திகை தீபம் வரையிலும் பலகாரங்கள் தயாரிக்கப்படும் வழக்கம் இருந்ததாகத் தெரிவித்தார். அதிரசம் மற்றும் உலர் பழங்கள் கலந்த மிக்ஸர் ஆகியவை தனது விருப்பமான தீபாவளி உணவுகள் என்றும் கூறினார்.
இதையடுத்து, போட்டியாளர்கள் பாரம்பரிய சுவையுடன் மைசூர் பாக், முறுக்கு, சோமாஸ், சீடை உள்ளிட்ட பலகாரங்களையும் பல்வேறு புதுமையான இனிப்பு வகைகளையும் தயாரித்து அசத்துகின்றனர்.
சமையல் போட்டி என்பதையும் தாண்டி, ஒரு ரூபாய் அதிரசம் முதல் வீட்டில் தயாரிக்கப்படும் தீபாவளிப் பலகாரங்கள் வரை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறைந்திருக்கும் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் நிகழ்ச்சியாக இந்த எபிசோட் அமையவுள்ளது.
Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு Sony VIZHA தொலைக்காட்சியில் காணலாம். மேலும், Sony LIV தளத்திலும் எப்போது வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம்.

Samantha Ruth Prabhu Gets Nostalgic About Saving Money to Buy a ₹1 Adhirasam! Actress Shares Heartwarming Childhood Memories on Celebrity MasterChef Tamil
Some foods are more than just a treat for the taste buds; they bring back cherished childhood memories and moments that remain close to our hearts. Actress Samantha Ruth Prabhu recently took a nostalgic trip down memory lane as she recalled one such special memory on the upcoming Diwali special episode of Celebrity MasterChef Tamil.
During the festive episode, Samantha opened up about her love for traditional Diwali sweets and shared a heartwarming childhood memory of buying adhirasam for just ₹1. She recalled how she would save money little by little to buy the adhirasam sold outside her house and eagerly enjoy the sweet treat. Samantha also expressed that recreating that simple childhood experience today is no longer possible.
Produced by Endemol Shine India, Celebrity MasterChef Tamil brings together popular personalities who participate in exciting culinary challenges and showcase their cooking skills.
The upcoming Diwali special episode will celebrate traditional festive delicacies and the beautiful memories associated with them. As part of a special culinary challenge, contestants will have 90 minutes to prepare four varieties of sweet and savoury dishes and create a festive gift hamper. One of the sweets must also be prepared without using refined sugar.
During the conversation, Chef Venkatesh Bhat also shared his childhood Diwali memories. Recalling how the festival was always associated with firecrackers and delicious food, he revealed that his family continued preparing Diwali sweets and savouries until Karthigai Deepam. He also spoke about his fondness for adhirasam and dry fruit mixture, which remain among his favourite festive treats.
Following the nostalgic conversations, contestants take on the challenge of preparing a variety of traditional delicacies, including Mysore Pak, Murukku, Somas and Seedai, along with several innovative sweet creations.
Going beyond a regular cooking competition, the special episode promises to celebrate the emotional connection people share with festive food, bringing back cherished memories of childhood, family traditions and the simple joys of Diwali.
Celebrity MasterChef Tamil airs Monday to Friday at 8 PM on Sony VIZHA. Viewers can also stream the episodes anytime on Sony LIV.
https://www.instagram.com/reel/DfRPZ7npnjF/?mdxt=dnkzbjZ0dTdnMzIw
