Friday, March 13
Shadow

டிக் டிக் டிக் படத்தை மக்கள் முதலில் ஏற்க தயங்குவார்கள் – ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது டிக் டிக் டிக். ஆசியாவின் முதல் விண்வெளி படம் என்ற பெருமையையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஜெயம் ரவி, ‘ முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அதே போல் தான் இப்படத்தையும் முதலில் மக்கள் ஏற்க கொஞ்சம் தயங்குவார்கள். நமது உழைப்பாளிகளை வைத்தே இப்படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கியிருக்கிறோம்.

நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கவைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீடெயிலாக இடம்பெற்றிருந்தது. இதற்காக கலைஇயக்குநரை மனதாக பாராட்டலாம்.’ என்றார்.

Leave a Reply