Sunday, June 21
Shadow

Tag: #விஷால்

சுந்தர்.சி – விஷால் கூட்டணியில்  உருவாக்கும்  பிரமாண்டமான “ஆக்‌ஷன்” திரைப்படம்

சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாக்கும் பிரமாண்டமான “ஆக்‌ஷன்” திரைப்படம்

Latest News, Top Highlights
“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C தெரிவிக்கையில்,  விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையி...

நடிகர் விஷால் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்ப...
கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

Latest News, Top Highlights
விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தின் பாடல் காட்சிக்காக விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது பாதி திண்டுக்கலில் தொடங்குகிறது. அங்கு படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கவும், விஷால் - கீர்த்தி சுர...
மக்களுக்கு நல்லது செய்கிற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால்

மக்களுக்கு நல்லது செய்கிற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால்

Latest News, Top Highlights
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான என். மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார். பின்னர் விஷால் பேசும்போது, ‘சமூக பிரச்னையை பற்றி...
ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

ரஜினிக்கு நானே தொண்டன்… அவருக்காக ரோட்ல இறங்குவேன் – விஷால்!

Latest News, Top Highlights
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனது அரசியல் பாதையை துவங்கி வைத்தார் ரஜினி. சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளன. மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர். ரஜினியின் அரசியல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்," என்றார்....
சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் தயா...
முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

Latest News, Top Highlights
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிதுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்த...
தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `இரும்புத்திரை'. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....
சின்ன படங்களை கொல்லாதீங்க: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

சின்ன படங்களை கொல்லாதீங்க: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

Latest News, Top Highlights
ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை மேல் குதிரை சவாரி, பெப்பே, ஒளிச்சித்திரம், நரிவேட்டை படங்களில் பணியாற்றிய கணேஷ்குமார் படத்தொகுப்பாளராக தனது பங்களிப்பை தந்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ‘முருகா’ அசோக், கேபிள் சங்கர், தரரிப்பாளர் திருநாவுக்கரசு, இயக்குனர் தங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது சிறிய பட தயாரிப்...
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்

Latest News, Top Highlights
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “இரும்புத்திரை“. இப்படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் பற்றி இயக்குனர் மித்ரன் கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது, அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். ...