Wednesday, October 28
Shadow

சந்தானம் போட்டுள்ள மாஸ்டர் பிளான்?

தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்ட காமெடி நடிகர் சந்தானம்.காமெடி நடிகராக நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்ததை பார்த்த இவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்து நடித்து வெளிவந்த ” வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” மற்றும் ” இனிமே இப்படித்தான்” படங்கள் தோல்வி அடைந்தது.

கடைசியாக வெளிவந்த ” தில்லுக்கு துட்டு” படம் வெற்றி பெற்றது.இதற்கு பிறகு இவர் ” சர்வர் சுந்தரம்”, ” சக்கைபோடு போடு ராஜா”, “ஓடி ஓடி உழைக்கும்”,” மன்னவன் வந்தானடி” படங்களில் ” சர்வர் சுந்தரம்” மற்றும்” சக்கைப்போடு போடு ராஜா” இந்த படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தேணான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.பல மாதங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட ” சர்வர் சுந்தரம்” திரைப்படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

Leave a Reply