
இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆண்டு என்று சொன்னால் மிகையாகது ஆம் அந்த அளவுக்கு வெற்றி படங்கள் அதோடு மிகவும் தரமான படங்கள் வெளியாகி திரையுலகினர் சந்தோஷத்தில் உள்ளனர் . அருமையான கதையம்சம் கொண்ட படங்களாக வெளியாகி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகது அதோடு பல படங்கள் வணிக ரீதியாக மிக பெரிய லாபம் கிடைத்துள்ளது .
அந்த வகை இந்த வார சினிமா போட்டி என்பது மிக கடுமை ஆம் மிக பெரிய நட்சத்திரங்கள் படங்களே நான்குக்கு மேல் வெளியாகிறது இதனால் போட்டி கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும் ஆனால் இதில் வித்தியாசமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் எளியாகும் படம் என்றால் சீதக்காதி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் சினிமாத்தனம் இல்லாத அதே நேரத்தில் மாசாலா தனமும் இல்லாமல் வெளியாகும் படம் சீதக்காதி வாங்க இந்த படத்தை பற்றி விமர்சனம் பார்க்கலாம்.
நாடக நடிகர் மற்றும் தனது நடிப்பு திறமையால் கலை துறையில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. அவரது முதுமை காலத்தில் என்ன நடத்து அப்போது அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பதே சீதக்காதி படத்தின் மீதி கதை.
நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு கொடுக்கப்பட்ட நாடக கலைஞர் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். தமிழ் சினிமாவின் மாக நடிகன் என்று சொன்னால் அது இவருக்கு மிகவும் பொருந்தும் இப்படி ஒரு வயசான கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் தாங்குவார்கள் காரணம் தன் இமேஜ் போக்கிவிடும் என்று ஆனால் இவர் துணிந்து இந்த வேடத்தில் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார்.
திரையில் அந்த கேரக்டராகவே மாறியுள்ளோடு கதையோடு ஒன்றி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவுரங்கசீப் சிங்கிள் சாட் சீன் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை. நாடக கலைக்கு இருந்த ரசிகர்கள் எப்படி காலத்திற்கு ஏற்ப காணாமல் போனார்கள் என்பதை மிகவும் அழக்காக டைட்டில் கார்டில் காட்டப்பட்டுள்ளது படம் பார்ப்பவர்களை வெகுவாக கவரும். இந்த படத்தை பார்த்த உடன் ஏன் இந்த படத்திற்கு தலைப்பாக சீதக்காதி என்று வைத்தார்கள் என்று தெளிவாக புரியும்.
படத்தின் துவக்கத்தில் வரும் முதல் 40 நிமிடங்கள் படத்தின் உயிராக உள்ளது, . இதுமட்டுமின்றி படத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுக்கு பின்னர் வரும் கதை வேகமாக நகர்வதுடன், கடைசி வரை அழகாக செல்கிறது.
படத்தின் மொத்த ஐடியாவும் தனித்துவமிக்கதுடன், சிறப்பாகவும் படம் பார்பவர்களை மகிழ்விக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஸ்கிரீன்பிளே சில இடங்களை சரியான வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், பல காட்சிகள் மெதுவாகவும் நகர்கிறது. இருந்தும் ரசிக்கவைக்கிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளில் சில இடங்களில், உண்மையான கதை இது என்பதை விட்டு விட்டு நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் உள்ளது. இந்த படத்தின் அறிவு சார்ந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் கதையை சொன்ன விதமும், உணர்சிகள் மிகுந்த டயாலாக் இருப்பதுடன். படம் சரியான திசையிலேயே பயணிக்கிறது.
படத்தில் ராஜ்குமாரின் பார்க் காட்சி, சுனிலின் காதல் சீன், நியூஸ் 7 டிபேட் காட்சிகள் மற்றும் மகேந்திரனின் கோர்ட்ரூம் கிளைமேக்ஸ் சீனகள் போன்றவை மறக்க முடியாத சீன்களாக உள்ளதுடன். நான்-ஸ்டாப் பன் மற்றும் கதை ஏற்றவகையில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்வெலுக்கு பின்னர் வரும் நீண்ட சண்டை காட்சி நன்றாக இருந்தாலும், இந்த நேரத்தில் தேவையான என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல கருத்து மற்றும் உண்மையையும் விட்டு செல்கிறது.
படத்தில், அய்யா ஆதிமூலம் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கிறார். இந்த கேரக்டர் மூலம் அவரிடம் இருந்து இதுவரை வெளிப்படாத திறமைகளை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராஜ்குமார் மற்றும் சுனில் ஆகியோரின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் பாலாஜி தரணிதரன் நல்ல படத்தை அளித்துள்ளார். கூடுதலாக படத்தில் காமியோ ரோலில் பிரபலங்கள் காட்சியளிப்பது சிறப்பு.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது பணிகளை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் வரும் பேக்ரவுண்ட் மியூசிக்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் கேமராகள் படத்தின் கதையை சொல்ல வெகுவாக பயன்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும். எடிட்டிங் ரசிகர்களை கவரும் வகையில் சுருக்கமாக சரியான வகையில் அமைந்துள்ளது. இதனால் 2 மணி 52 நிமிட படத்தை அதிக நீளம் என்று யாரும் உணராத வகையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில், சீதக்காதி தமிழ் சினிமாவின் வரலாறு பட்டியலில் இடம் பிடிக்கும் Rank4/5
