Saturday, April 18
Shadow

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது..,
(எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன)

மாரி 2
மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா???

ரானா படம்

தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்டாக நடிக்க உள்ளார். 1990களில் நடப்பது போன்ற கதையாம். இந்த படத்தில் நிதின் அல்லது சர்வானந்த் ஹீரோவாக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இறுதியில் ராணா நடிப்பது உறுதியானது. விரத பர்வம் 1992 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு காதல் படமாம். காதல் காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நக்சலைட்

ஒரு ஹீரோயின் நக்சலைட்டாக நடித்தால் அவரது எதிர்காலம் எவ்வாறு மாறும் என்று சற்றும் சிந்திக்காமல், தனது இமேஜ் பற்றி யோசிக்காமல் சாய் பல்லவி வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறார். புதுவரவாக வரும்பொழது அனைவரும் செய்யும் வேலை இது தான் கொஞ்சம் மார்க்கெட்டல் அடித்தால் நாம் போடும் தாப்பளுக்குள் சிக்கித்தான் ஆகவேண்டும் என சிலர் வெறுப்பில் கூறுகின்றனர்