Wednesday, October 28
Shadow

விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ட்ரைலர் பற்றிய ஒரு கண்ணோட்டம்

விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அந்த வகையில் சீதக்காதி படத்துக்கு கொஞ்சம் அதிகாமகவே இருக்கு என்று தான் சொல்லணும் காரணம் விஜய் சேதுபதியின் தோற்றம் தான் இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ள படம் சீதக்காதி. 80 வயது நாடக நடிகராக அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இவருடன் அர்ச்சனா, மவுலி, பக்ஸ், இயக்குநர் மகேந்திரன், வைபவ்வின் அண்ணன் சுனில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 96 இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 25வது படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

3.09 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில், ரசிகர்கள் கொண்டாடும் அய்யா விஜய் சேதுபதி, திடீரென படப்பிடிப்புகளில் நடிக்காமல் காணாமல் போய் விடுகிறார். அவரை எதிர்த்து தயாரிப்பாளர்கள் குரல் கொடுக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை என டிரைலரை பார்க்கும்போது புரிகிறது. இதன் உடன் அந்தக்கால நாடகத்தின் மகத்துவமும் இடம்பெறும் என தெரிகிறது.

டிரைலரில், விஜய் சேதுபதி, வயதானவராக அப்படியே பொருந்தியிருக்கிறார். அவரின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. டிரைலரின் இறுதியில், “ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாக மாறிவிட்டேனே…” என்ற ஒரே ஒரு வசனத்தை மட்டுமே விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது