Wednesday, September 9
Shadow

‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!

‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘சேயோன்’ படக்குழுவில், இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத் தலைவராகப் பன்முக அடையாளம் கொண்ட செந்தமிழன் திரு. சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

ஒவ்வொரு புதிய அறிவிப்பின் மூலமும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘சேயோன்’ திரைப்படம் தற்போது மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள செந்தமிழன் சீமான், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சீமான் கலந்து கொண்டு தனது காட்சிகளில் நடித்து வருகிறார். அவரது இணைவு படக்குழுவினரிடமும், ரசிகர்களிடமும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்தியத் திரையுலகின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தை உலகநாயகன் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியானது முதல், அதனைத் தொடர்ந்து வெளியாகும் ஒவ்வொரு புதிய தகவலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கி வருகிறது. தற்போது செந்தமிழன் சீமான் படக்குழுவில் இணைந்திருப்பது, ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி, சந்தோஷ் நாராயணனின் இசை, அன்பறிவின் அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் தற்போது சீமானின் முக்கியமான இணைவு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் ‘சேயோன்’, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

வரும் நாட்களில் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் புதிய அறிவிப்புகள் ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senthamizhan Seeman Joins Sivakarthikeyan’s ‘SEYON’ in a Key Role

The highly anticipated Tamil film SEYON, starring Sivakarthikeyan in the lead role, has welcomed another prominent personality to its cast. Director, actor and political leader Senthamizhan Seeman has joined the film in an important role.

The announcement has created fresh excitement around the project, which has been steadily gaining attention among audiences with every new update. Seeman is currently participating in the ongoing shooting schedule of SEYON in Madurai and has begun filming his portions for the movie.

Known for his multifaceted career as a filmmaker, actor and political leader, Seeman’s inclusion in the cast is expected to add another interesting dimension to the film. His presence in SEYON has further increased curiosity and expectations among fans and cinema enthusiasts.

Sivakarthikeyan plays the lead role in the film, which is directed by Sivakumar Murugesan. The music is composed by Santhosh Narayanan, while popular stunt choreographers Anbariv are handling the action sequences.

SEYON is jointly produced by Raaj Kamal Films International and Turmeric Media. The film is produced by Kamal Haasan and R. Mahendran.

Since its announcement, SEYON has continued to build strong anticipation with each new development. The addition of Senthamizhan Seeman to the cast has now given fans another reason to look forward to the project.

With Sivakarthikeyan in the lead, Sivakumar Murugesan directing, Santhosh Narayanan composing the music, Anbariv choreographing the action and Senthamizhan Seeman joining the cast in a key role, SEYON is shaping up to be one of the most eagerly awaited upcoming Tamil films.