![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2019/03/a-l-vijays.jpg)
இயக்குனர் விஜய் நடிகை சாய் பல்லவியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த தகவலை விஜய் தரப்பு மறுத்துள்ளது என்றும். இது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு இயக்குனர் விஜய் நதியாகி சாயிஸா-யை திருமணம் செய்ய உள்ளதா தகவல் வெளியாகி, பிறகு அது அண்ணன்-தங்கை உறவு என்று தெரிவிக்கப்பட்டது.
இயக்குனர் விஜய் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார். விப்ரி மீடியா தயாரிக்கும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிகை கங்கனா ராவத் நடிக்கிறார். மேலும் தேசிய விருது வென்ற நடிகர் சமுத்திரகனி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ‘ஜெயா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் இந்த படம் மட்டுமின்றி தேவி 2 மற்றும் வாட்ச்மேன் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் வரும் ஏப்ரல் மாதத்தில் ரீலிஸ் ஆக உள்ளன.