Saturday, October 12
Shadow

சிங்கம் 3(Si3) – திரைவிமர்சனம் கம்பீரம் Rank 5/4.2

தமிழ் சினிமாவில் ஒரு படம் மூன்று பாகம் வருவது இது தான் முதல் முறையாகும் அதுவும் ஒரே கதை ஒரே கதாபாத்திரம் மலையாளத்தின் வந்துள்ளது தமிழுக்கு முதல் முறை அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றால் அது தமிழ் சினிமாவுக்கு பெருமை என்று தான் சொல்லணும்

ஒரு படத்தின் டைட்டில் அந்த படத்தின் கதைக்கு பொருத்தம் இருக்கணும் இல்லை அந்த நடிகருக்கு பொருத்தம் இருக்கணும் அப்படி இருந்தால் தான் அது மக்களிடம் வரவேற்ப்பு இருக்கும் அப்படி ஒரு வரவேற்ப்பு உள்ள நடிகர் என்றால் அது நிச்சயம் ரஜினிகாந்த மட்டும் தான் அவரின் படத்தின் டைட்டில் எல்லாமே மிகவும் வலுவான கதாபாத்திரம் உள்ள டைட்டிலாக இருக்கும் அதே போல் சூர்யா சிங்கம் என்ற டைட்டில்க்கு ஏற்ப தன் உடல் அமைப்பும் நடிப்பும் வசன உச்சரிப்பும் சிங்கம் போலவே காட்ச்சியளிகிறார் என்று ஹான் சொல்லணும் அந்த அளவுக்கு கம்பீரம்

படத்துக்கு மிக முக்கிய பங்கு படத்தின் இயக்குனர் ஹரி அடேங்கப்பா என்ன ஒரு வேகம் சும்மா மின்னல் வேக திரை கதை காட்சியமைப்பு வசனங்கள் இபப்டி ஒவ்வொன்றும் பாராட்டனும் தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த அக்ஷன் இயக்குனர் என்று தான் சொல்லணும் மக்களின் ரசனையை புரிந்து கொண்டு படம் இயக்கியுள்ளார் வேகம் வசனம் செண்டிமெண்ட் காதல் காமெடி இப்படி எல்லாம் கலந்த கலவியாகதான் கொடுத்துள்ளார் .

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார்.

இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார்.

ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது.

இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மிக சிறந்த நாயகன் என்றால் அது சூர்யாவும் ஒர்ருவர் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த படத்தின் சும்மா தெறிக்க விட்டுள்ளார் ஒரு சில நடிகருக்கு சண்டை வரும் ஒரு சில நடிகருக்கு ஸ்டைல் வரும் ஒரு சில நடிகருக்கு ஸ்டைல் சண்டை வந்தால் நடிப்பு வராது ஆனால் ஒரு எல்லா அம்சமும் நிறைந்த ஒரு நடிகர் என்றால் அது நிச்சயம் சூர்யா தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம் அடேங்கப்பா பிரமிக்க வைக்கிறார் நடிப்பில் சண்டைகாட்சிகளில் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளார் என்று தான் சொல்லணும்.

சுருது ஹாசன் இரண்டாவது நாயகி கிடைத்த வாய்ப்பை மிகவும் கவரும் அளவுக்கு அருமையாக துருதுருன்னு நடித்துள்ளார் இவர் நடித்த படங்களில் இது தான் அவருக்கு கிடைத்த நல்ல படம் என்று சொல்லணும் அதே போல நடிக்கவும் செய்துள்ளார். என்ன ஒரே மைனஸ் இவரது குரல் மட்டும் என்று சொல்லணும்.

அனுஷ்கா மற்ற இரண்டு பாகங்களில் வந்த ளவுக்கு இந்த படத்தில் அவருக்கு காட்சிகள் இல்லை என்று தான் சொல்லணும் இந்த இடத்தில இயக்குனரை பாராட்டனும் மக்களின் ரசனை புரிந்து காட்சிகள் வைத்துள்ளார் அனுஷ்காவை பற்றி பெருசா சொல்ல ஒன்றும் இல்லை

படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகராக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள்.

கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல் ஆக்ஷன் படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில்சி Si3 கம்பீரம் Rank 5/4.2

Leave a Reply