Tuesday, October 27
Shadow

பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி பிறந்த தினம்

டெல்லியில் பிறந்த இவர், தமிழில் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான இதயம் ஒலி விளம்பரத்தில் பாடல் பாடினார். இந்த விளம்பரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.

தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த இவர், தனது பள்ளி படிப்பை டெல்லியில் முடித்தார்.

திரையுலகில் முதல் முதலில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான லேசா லேசா படத்தில் “ஏதோ ஒன்று” என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து பல தமிழ் படங்களில் பாடிய போதும், சாமி படத்தில் இடம் பெற்ற கல்யாணம் தான் கட்டிகிட்டு பாடல் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது.

இவர் பாடகர் எம் ஜெ ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் பாடிய பாடல் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

தென்னவன், திருமலை, லேசா லேசா, சாமி, விசில், ஒற்றன், குறும்பு, ஆளுக்கொரு ஆசை, ஏறுமுகம், கோவில், எதிரி, சதுரங்கம், மதுரா, அரசாட்சி, ஜனனம், ஜோர், கண்ணாடி பூக்கள், ஜி, தொட்டி ஜெயா, குருதேவா, பாரிஜாதம், கோடம்பாக்கம், தேவதையை கண்டேன், வேல், ஆணை, வீரமும் ஈரமும், அம்மாவாகிய நான், கோவை பிரதர்ஸ், தலைநகரம், நாயகன், ஆயுதம் நியுட்டனின் மூன்றாம் விதி, ராட்டினம், சட்டம் ஒரு இருட்டறை, இது கதிர்வேலன் காதல்