Thursday, March 12
Shadow

ஸ்பைடர் – திரைவிமர்சனம் (படத்தின் கரு போல மனிதாபிமானம்) Rank 3/5

இயக்குனர் முருகதாஸ் மீண்டும் ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்துவந்துள்ளார் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அரசியல்வாதிகளை பற்றி இல்லாமல் நம்மை பற்றியும் நாமக்கல் இல்லாத ஒரு விழுபுனர்வை பற்றியும் பெண்கள் நினைத்தால் என்ன வேண்டும் மென்றால் செய்ய முடியும் என்பதை பற்றியும் மிக அழுத்தமாக கூறியுள்ளார். என்று தான் சொல்லணும் குறிப்பாக நமக்கு எங்கு எல்லாம் மனிதாபிமானம் குறைகிறது என்பதை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் கொஞ்சம் மாசலா கலந்து சொல்லி இருக்கிறார். அது தான் கொஞ்சம் வேதனை என்று சொல்லணும் ஒரு படம் என்றால் அதுக்கு கதாநாயகி வேண்டும் அவளுக்கு ஒரு அறிமுகம் வேண்டும் என்று கதையை விட்டு கொஞ்சம் வெளியில் போனது மைனஸ் அதுவும் இப்படி பட்ட ஒரு அறிமுகம் தேவையா என்பது இன்னொரு கேள்விகுறி முதல் பாதி கொஞ்சம் ரப்பர் காரணம் ஹீரோ அறிமுக தெலுங்கு படம் ஸ்டைல் அடுத்து நாயகி காட்சிகள் அதே போல சில காட்சிகள் நம்ப முடியவில்லை சினிமா தனத்தையும் கொஞ்சம் மீறிய காட்சிகள் குறிப்பாக மகேஷ் பாபு விபத்து கம்பி குத்தி கொள்ளும் காட்சி அளவுக்கு முடியாத கற்பனை

இந்த படத்தின் மூலம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோ தமிழில் அறிமுகம் நல்ல ஒரு அறிமுகம் மோதிர கை கொட்டு என்று தான் சொல்லணும். நல்ல அறிமுகம் மகேஷ் உழைப்பு அதிகம் எல்லா காட்சிகளும் மிகவும் சிரமப்பட்டு செய்துள்ளார் கடுமையான உழைப்பாளி என்று சொல்லணும் இதனால் தான் இவர் ஆந்திரா சூப்பர் ஸ்டார் என்பதில் சந்தேகம் இல்லை தன் பங்கை உணர்ந்து செய்துள்ளார் இயக்குனரின் நடிகராகவும் இருந்துள்ளார் அது திரையில் நன்றாக தெரிகிறது

இந்த படத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங் நாயகி வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிக கொடுராமான வில்லன் இவருக்குள் இப்படி ஒரு நடிப்பா என்று வியக்கவைக்கும் அளவுக்கு நடிகர் தம்பியாக பரத் கொஞ்ச நேரம் வந்தாலும் ஓகே ஹீரோ நண்பனாக ஆர்.ஜே.பாலாஜி ஷாஜி,சாயாஜி ஷிண்டே,நாகிநீடு ஜெயப்ரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்கி பாடல்வரிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை திரைகதை வசனம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஸ்பைடர்.

படத்தின் கதையை பாப்போம்: மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.

ஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு.

இந்த முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கும் மகேஷ்பாபு, பரத்துக்கு பின் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் அறிகிறார்.

இறுதியில் இவர்களை மகேஷ் பாபு என்ன செய்தார்? எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

தெலுங்கில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் ‘ஸ்பைடர்’ மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்த மகேஷ்பாபு இந்த படத்தில் பொம்மை போன்று இருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த முகபாவனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.

பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் வெட்டியான் மகன்கள் தினமும் அழுகுரல்கள் கேட்கும் இவர்கள் ஒரு கால கட்டத்தில் அது அவர்களின் மனிதாபிமானத்தை குறைத்து மற்றவர்கள் அழுகை இவர்களின் சந்தோசம் என்பது போல ஆகிவிட்டது. இதை எப்படி நடக்கிறது இந்த கொலைகளை எப்படி தடுக்கிறார் என்பது தான் மீதி கதை

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் அது ஒரே ஒரவர் மட்டும் தான் அது எஸ்.ஜே.சூர்யா என்று தான் சொல்லணும் அவரின் கதாபாத்திரம் தான் சிறு வயதில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஒரு சிறுவன் அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு நிச்சயம் அந்த சிறுவனுக்கு விருது கொடுத்து கொண்டானும் என்று தான் சொல்லணும் அதே போல எஸ்.ஜே.சூர்யா உலக மாக நடிகன் இவருக்குள் இப்படி ஒரு மிருகம் ஒளிந்து இருப்பதை மிக அழகாக வெளிபடுத்தியவர் ஏ.ஆர். முருகதாஸ்

பரத் சிறுது நேரம் வந்தாலும் சிறப்பாக செய்துள்ளார் மகேஷ் பாபுவுடன் போடும் சண்டை மிகவும் ரிஸ்க் எடுத்து செய்துள்ளார் மகேஷ் பாபுவுக்கு நான் சளைத்தவன் இல்லை என்று நிருபித்துள்ளார்.

ராகுல் ப்ரீத் சிங் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார் ரசிகர்களை கொஞ்சம் மகிழவைதுள்ளர் அழகு நடிப்பு கவர்ச்சி எல்லாம் ஓகே அடுத்து கார்த்தி படத்தி நடிக்கிறார் வாழ்த்துகள்

படத்துக்கு எப்பவும் போல ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பலமாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எல்லாமே அருமை அதிலும் ஆளி செம சூப்பர் படத்தின் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் இவரை பற்றிநாம் என்ன சொல்லவேண்டும் எப்பவும் போல கதைக்கு தேவையான ஒளிப்பதிவு

சண்டைகாட்சி பீட்டர் ஹைன் அடேங்கப்பா உங்க சண்டைகாட்சிகள் தமிழில் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் ஆங்கில படம் போல சண்டைகாட்சிகள் குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் பரத் மகேஷ் பாபு சண்டை காட்சிகள் மிக அற்புதமாக தத்துருபமாக அமைத்துள்ளார் .

மொத்தத்தில் ஸ்பைடர் ரசிக்கலாம் படத்தின் கரு போல மனிதாபிமானம் தான் Rank 3/5

Leave a Reply