
நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.
இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார்.
இந்நிலையில், தென்னிந்திய படம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். வி.சி.வடிவுடையான் இயக்கும் வரலாற்று படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு குறித்து படக்குழு புதிர் வைத்திருந்த நிலையில், இந்த படத்திற்கு `வீரமாதேவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த படம் டப் செய்யப்படுகிறது.
இந்த படத்திற்காக கத்திச்சண்டை, குதிரை பயற்சி மேற்கொள்கிறார்.
