Friday, April 17
Shadow

Tag: #karthi

கார்த்தி-ஜோதிகாவின்  அடுத்த படத்தில் அன்சன் பால்

கார்த்தி-ஜோதிகாவின் அடுத்த படத்தில் அன்சன் பால்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் அன்சன் பால். சமீபத்தில் வெளிவந்த 90எம்எல் படத்தில் ஓவியா, பாய்பிரண்டாக வரும் அந்த சிக்ஸ் பேக்ஸ் நடிகர் தான் அன்சன் பால். அவர் இப்போது கார்த்திக்கு வில்லனாக நடிக்கப்போகிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அன்சன் பால். வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக கெட்அப் மாற வேண்டியது இருப்பதால் அன்சன் பால், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது....
“எழுமின்” படத்தை என் மகளுடன் பார்ப்பேன் நடிகர் கார்த்தி

“எழுமின்” படத்தை என் மகளுடன் பார்ப்பேன் நடிகர் கார்த்தி

Shooting Spot News & Gallerys
வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள், சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால் கூட எல்லாம் சினிமா மயமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்...
கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Latest News, Top Highlights
`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்திற்காக ரேக்ளா ரேஸ் நடப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் தென்காசி சென்று கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அங்கு ரேக்ளா ரேஸ் பார்க்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது டு...
இதுதான் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் – நடிகர் சூரி

இதுதான் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் – நடிகர் சூரி

Latest News, Top Highlights
தற்போது சூரி முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சூரி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் ஒன்று. கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூரி, பாட்டிகளோடு சேர்ந்து செல்பி எடுத்து அதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு ...
முதல் முறையாக கார்த்தியோடு கைகோர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

முதல் முறையாக கார்த்தியோடு கைகோர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

Latest News, Top Highlights
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படம் ‘கடைகுட்டி சிங்கம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி வரும் நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் ரஜத். ரஜத், ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் இந்தப் படத்தில் ஜோடி போடுகிறார். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுதான் முதல்முறை....
திரிஷாவுடன் இணையும் கார்த்தி

திரிஷாவுடன் இணையும் கார்த்தி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதில் ‘மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது....
மணிரத்தினம் மற்றும் ரஹ்மானின் 25 வருட கலை பயணத்தின் அனுபம் தான் சிறந்தது – சூர்யா

மணிரத்தினம் மற்றும் ரஹ்மானின் 25 வருட கலை பயணத்தின் அனுபம் தான் சிறந்தது – சூர்யா

Latest News
இயக்குநர் மணிரத்னம் பேசியது , 25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயனித்துள்ளோம் , அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். காற்றுவெளியிடை திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படபிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் . அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது ப...
தீரன் அதிகாரம் ஒன்று ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்  !!!

தீரன் அதிகாரம் ஒன்று ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் !!!

Latest News
நேற்று வெளியான காற்றுவெளியிடை திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று சாதனைகளை ஒரு பக்கம் படைத்து வரும் வேளையில், கார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படபிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படபிடிப்பு “ ஜெய்சல்மர் “ பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். யதார்த்தமான லோக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார். எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ...
சுசியை பின்னால் இருந்து இயக்குபவர் அந்த மூன்று எழுத்து நடிகரா??

சுசியை பின்னால் இருந்து இயக்குபவர் அந்த மூன்று எழுத்து நடிகரா??

Latest News
தற்போது இணையதளத்தில் உள்ள நிலை அடுத்து சுசி யார் வீடியோ போடுவார் அதை பற்றி பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு இணையத்தில் அப்படி ஒரு ஹாட் டாக் போய் கொண்டுள்ளது இது ஒரு புறம் இருக்க வந்த வீடியோக்கள் அணைத்தம் உண்மை போலவே உள்ளது என்று பார்பவர்கள் மனதில் பட்டாலும் அதன் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை அதே போல இந்த ஆபாசத்தை போடுவது சுசி தானா என்றும் இன்னும் உறுதி செய்ய வில்லை அதற்குள் சுசி இவ்வாறு செய்வதற்கு அவரே காரணம் என பல குண்டர்கள் புரளி கிளப்பி வருகிறார்கள் எது உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளிவரும்...