நடிகை அஞ்சலிதேவி பிறந்த தின பதிவு
அஞ்சலிதேவி பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்.
அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.
1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெ...