Thursday, August 18
Shadow

Tag: அதர்வா

நடிகர் அதர்வா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார். அதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள். 2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார். இவர் நடித்துள்ள படங்கள்: ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம், பூமராங், செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கணிதன், ஈட்டி, சண்டி வீரன், இரும்பு குதிரை, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பாணா காத்தாடி...
அதர்வா-ஹன்சிகா நடிக்கும்  ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

அதர்வா-ஹன்சிகா நடிக்கும் ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் '100'. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதி மே 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அதர்வாவின் அடுத்த ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

அதர்வாவின் அடுத்த ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட்...
அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
கெளதம் கார்த்திக் – ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க ஒப்பந்தமானார். அதர்வாவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். தற்போது, இப்படத்திற்கு ‘பூமராங்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்த...
அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
ஒரு வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே அக்கதையின் கதாநாயகன் மேலும் வலுவாக முடியும். ஒரு வில்லனின் கதாபாத்திரம் என்பது அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாகும். ஜனரஞ்சகமான படங்களை சொன்ன நேரத்திற்குள் முடித்து வெற்றி பெறும் இயக்குனர் R கண்ணனின் , எழுத்து மற்றும் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' பட பாடல்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் மேகா ஆகாஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த அதர்வா- மேகா ஆகாஷ் ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இதற்கு முன்பே இது மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று அசத்தியுள்ளார் ...
நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். நயன்தாராவிற்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை டிமான்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’

அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’

Latest News
சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து அதர்வா, நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' என்ற படத்திற்கு இசை அமைக்க உள்ளார் ஆதி. மாயா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. 'ஹிப் பாப் தமிழா' ஆதியும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் இப்படத்தின் கம்போசிங்கை விரைவில் துவங்கவிருக்கிறார்கள். திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து ஆகிய படங்களைத் தயாரித்த 'கேமியோ ஃபிலிம்ஸ்' இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதுவரை தயாரித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியலாக வெற்றிபெற்றதில்லை. தொடர்ந்து நஷ்டப்பட்டதால் பக்கா கமர்ஷியல் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதர்வா, நயன்தாரா இருவருக்கும் பெரிய சம்பளம் கொடுத்து இந்தப் படத்தில் புக் பண்ணியுள்ளனர். இது அதர்வாவும், நய...