Monday, July 13
Shadow

Tag: கன்னட

மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு ஜோ...

“பரியேறும் பெருமாள்” படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பெரிய இடத்து வாரிசு

Latest News, Top Highlights
"பரியேறும் பெருமாள்" படத்தின் கன்னட ரீமேக்கில் இந்திய வங்கி நிறுவனர் திரு.வி.கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பேரன் அர்யன் ஷியாம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கி நிறுவனரான திரு.வி.கிருஷ்ணசுவாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் கொள்ளுபேரன் அர்யன் ஷியாம், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வழக்கறிஞராக இருந்த போதும் திரு.வி.கிருஷ்ணசுவாமி பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியுள்ளார்.  அவர்கள் நடத்திய "அர்பத்நாட் பேங்க்கை" கீழிறக்கி, இந்தியர்களுக்கான வங்கி என்று இந்தியன் வங்கியை நிறுவினார். தமிழக சட்டமன்றத்தின் வெளியில், கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட சிலைகளில் இவர் முதல் இந்தியராவார். இன்றும், திரு.வி.கிருஷ்ணசுவாமியின்  நினைவாக அனைத்து இந்தியன் வங்கி கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. திரு.வி. கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பெயரனான  ஷியாம், ஏ.வி.எம். சரவணனின் பே...

கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜ்குமார்  பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள். கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க...