
கலகலப்பு-2 திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5
சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய்.
இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய்.
இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, தற்...