Thursday, June 24
Shadow

Tag: சினிமா

மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வை...

உலக சினிமா வரலாற்றுல் ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் 13வது படமாக உருவாகும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

Top Highlights
ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அவர் உருவாக்கிய படைப்புகள் ஒருபோதும் ரசிகர் கூட்டத்தினிடையே ஒரு ஈர்ப்பை கொடுக்க தவறியதில்லை. கலை மற்றும் வணிக ரீதியான திரைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு தடையை உடைத்தார். இது வெறுமனே அவரது வெற்றி மட்டுமல்ல, பலர் அதை தங்கள் சொந்த வெற்றியாக கருதி பாராட்டினர். இவர், ‘விருது படம்’ எனக் குறிப்பிடப்பட்ட, கலை சினிமா என்பது வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டத்தினருக்கானது என்ற ஒரு நம்பிக்கை இருந்தபோது, அதன் கருப்பொருளில், அதே சமயம் வணிக ரீதியான அம்சங்களை கலந்து வழங்குவதன் மூலம் அந்த மாயையை உடைத்தார். இப்போது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒரு படைப்பாளராகவும் கலைஞராகவும் உருவாக்கியிருக்கும் அவரது அடுத்து வரவிருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதே...
காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார். பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில...
சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!

சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!

Latest News, Top Highlights
நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு அகிரா டெக்னாலஜிஸ் என்னும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம் நடத்தும் செந்தில் நாயகம், கணபதி, மற்றும் மார்ஸ் ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை காண முயற்சித்தார். ஒராண்டில் ஒர் நிகரில்லா தீர்வுடன் வந்துவிட்டது. ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ரசிகர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே பல தகவல்கள் அளிக்கவும் நாம் கேட்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா சார்ந்த குறிப்பிட்ட சந்தேகங்களுக்கும் விடையளிக்க...
CLOSE
CLOSE