Saturday, February 15
Shadow

Tag: #ஜோதிகா

பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

Latest News, Top Highlights
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கோலிவுட் கதையை உருவாக்கத் தயாராக உள்ளார். மாநிலத்தில் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களின் சக்திவாய்ந்த சங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், தமிழ் படம் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு மே 29 அன்று தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், ஜோதிகா தமிழ் ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் ஜூம் அழைப்பு மூலம் டிஜிட்டல் விளம்பரங்களைத் தொடங்கினார், அங்கு அவர்கள் படம் பற்றி பேசினர், அதன் டிரெய்லர் வியாழக்கிழமை இணையத்தில் ஒரு இடிச்சலுடன் வரும், மே 21. பொன்மகள் வந்தாள் டி ஜோதிகா.மக்கள் தொடர்பு சிற்றேடு நடிகை ஊடக மக்களுடன் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டார், மேலும் ஜோதிகாவும் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்களுடன் ரவுண்ட்டேபிள் போன்ற ஒரு நேர்காணலில் பங்கேற்பார். விளம்பரத்திற்காக பொது மக்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதற்காக அறியப்பட்ட ...
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...
வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

Latest News, Top Highlights
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

Latest News, Top Highlights
'வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோ...
ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

Latest News, Top Highlights
  பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், டப் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் பாலா படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், மிக விரைவில்...
சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

Latest News, Top Highlights
`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...
வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

Latest News, Top Highlights
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த...
சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

Latest News, Top Highlights
சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். இவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகிறார்கள் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி இருப்பது இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு சிங்கத்துக்கு, பிறந...
பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்' என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்...