டிஎஸ்பி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. இந்த படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே பார்க்கலம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியின் மகனாகவும், துடிப்பான இளைஞராகவும் வலம் வருகிறார் விஜய் சேதுபதி { வாஸ்கோ ட காமா }.சேர்ந்தால் அரசாங்க உத்யோகத்தில் மட்டுமே சேரவேண்டும் என்று கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய் சேதுபதி.
இதற்கு இடையில் கதாநாயகி அணு க்ரீத்தியுடன் { அன்னபூரணி } காதலில் விழுகிறார். இப்படி ஒரு பக்கம் வேலை மறுபக்கம் காதல் என்று சுற்றி திரிகிறார் விஜய் சேதுபதி. இந்த சமயத்தில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது.
தனது நண்பன் தங்கையின் திருமணத்திற்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகிறார்கள். திண்டுக்கல்லில் வந்து இறங்கியவுடன் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் ...