மகாமுனி திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)
மவுன குரு படத்தை இயக்கிய இயக்குனர் சந்தனகுமார் இயக்கத்தில் நடிகர் ஆரியா நடித்துள்ள படம் மகாமுனி. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் இந்த குழுவினர் சிறந்த கதையை கொண்ட படமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
நடிகர் ஆரியா மகா மற்றும் முனி என்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு கேரக்டர்களும் ஒரே மாதிரியான சுழ்நிலையில் வாழ்ந்து வருகின்றார். அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவர்களது லைப்ஸ்டைல் மற்றும் மேனரிசம்கள் மட்டுமே. அவர்கள் வாழ்க்கை மற்றும் பாடி லாங்க்வேஜ்களே அழக்காக வெளிக்காட்டியுள்ளனர். நடிகை இந்துஜா மகாவின் மனைவியாகவும், மகிமா நம்பியார் முனியின் காதலியாகவும் நடித்துள்ளனர்.
ஜெயிலில் தொடங்கும் இந்த கதையின் முழுவதும் பிளாஷ்பேக்கில் விரிவடைகிறது. இந்த பிளாஷ்பேக்கில், எப்படி ஒவ்வொரு கேரக்டர்களும் வேறுபட்ட சூழ்நிலையில...