பெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை தமன்னா, சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
நடிகை நயன்தாராவை தொடர்ந்து, தமன்னாவும் தற்போது ஹீரோ அல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். தமன்னா சோலோவாக நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் படம் 'அனந்தோ பிரம்மா' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாகும்.
தெலுங்கு வெர்சனை போலவே தமிழிலும் பெட்ரோமாக்ஸ் படம் காமெடி சீன்கள் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக உருவாகி உள்ள யோகி பாபுவின் காமெடியும் இந்த படத்தில் சிறப்பாக உள்ளது.
இந்த படம் பேய் படம் என்றாலும், குழந்தைகள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின...

