பூஜையுடன் தொடங்கியது ரியோ ராஜ்- ரம்யா நபீசன் நடிக்கும் புதிய படம்
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் ரம்யா ந்பீசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
அண்மையில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ், ரியோ ராஜ் நடிப்பில் புதிய படம் ஒன்று தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இந்த பூஜையில் படத்தில் நடிக்கும் மற்றும் பணியாற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்
இந்த படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் தெரிவிக்கையில், மழைகால சீசனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று மழை காலத்தில் ஷூட்டிங் நடத்துவது இந்தியாவில் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்றாகும். இது எனக்கும் மிக நல்ல துவக்கமாகவும், வெற்றி படமாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார்.
இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடிக...