Monday, April 28
Shadow

Tag: பஞ்சு அருணாசலம்

திரைப்பட இயக்குனர் பஞ்சு அருணாசலம் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின. பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு நடிகர் சுப்பு ஆவார். ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராசாவை அறிமுகப்படுத்தினா...