Saturday, February 8
Shadow

Tag: பிகில்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிகில் படம் ரீ-ரிலீஸ்….

Latest News, Top Highlights
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகமே ஸ்தம்பித்து நிற்க்கும் நிலையில்..... மக்கள் தேவை ஏற்ப்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும், மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் மற்றும் யாரிடமும் நெருங்கி பழக கூடாது சமூக இடைவெளியை கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அந்த அளவிற்க்கு கொரோனா வைரஸ் கோடி கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படி உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நாடுகள் விதிமுறைகளை தளர்த்தி..... இயல்பான நிலைக்கு திருப்ப தாயாராகிக்கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் பிரான்ஸ் நாடு மீண்டும் திரையரங்கை ஜூன் 22-ஆம் தேதி திறக்கபோவதாக அறிவித்துள்ளது. தற்போது..... தளபதி விஜய் மற்றும், நயன்தாரா நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் "பிகில்"  விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்காக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஜூன்...

பிகில் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
நடிகர் விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாக்கியதுடன், இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் மைக்கல் விஜய். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார். இந்நிலையில் அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார். அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக மாறுகிறார். ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை. மு...

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி

Latest News, Top Highlights
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார். இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு ...
விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை, இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....

பிகில் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் உள்ள விருது வென்ற இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
சர்கார் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்க...

பிகில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிகில் படம் கேரளாவில் ரூ 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இவை மலையாள படங்களையே மிஞ்சும் வியாபாரம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10 தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

பிகில் சாதனையை முறியடித்த நேர்கொண்ட பார்வை

Latest News, Top Highlights
பிகில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி வெளியானது. இந்தப் பாடலை வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 6.91 லட்சம் பேர் லைக்ஸூம், 39 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர். இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின் பிங்க் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிகில் சாதனையை நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது. தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 66 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 2.48 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 16 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த படத்தின் போஸ்ட் புரோடைக்ஷ்ன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில் எந்த வகையான அரசியல் சாயமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுமையான ஸ்போர்ஸ் சுற்றி நடக்கும் என்டர்டையிமென்மென்ட் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
விஜய் சினிமா வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாகிறது பிகில்

விஜய் சினிமா வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாகிறது பிகில்

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் விஜய் சினிமா வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்று பெயர் பெற்றுள்ளது. அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர். இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...