Friday, October 30
Shadow

Tag: விமர்சனம்

பட்டாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
ஒரு பெரிய வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் அந்த நடிகரின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே கூடிவிடுவது தமிழ் திரையுலகில் வழக்கமானது. அதுவும் பல வகைகளிலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தில், மிக பக்குவமான பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து 'அசுர' வெற்றி பெற்ற பிறகு தனுஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இடையில் வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' முன்பே முடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் அறிந்திருந்தனர். இப்படி எதிர்பார்ப்புக்கு இடையில் வந்திருக்கும் 'பட்டாஸ்' மூலம் தனுஷ் அடுத்த கட்டத்துக்குப் போகிறாரா அல்லது 'மாரி' ஸ்டைல் பழைய ரூட்டுக்கே திரும்புகிறாரா? 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, ட்ரெயிலரை பார்த்தே கணிக்கக்கூடிய எளிய கதையோடு வந்திருக்கிறார். சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்...

தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)

Latest News, Review
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது. மூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர். தர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தி...

ஹீரோ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
சக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி (இவானா) ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார். இதையடுத்து ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை (அபய் தியோல்) எதிர்கொள்கிறார். இதற்கிடையே சத்யமூர்த்தி(அர்ஜுன்) பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அது படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் இல்ல படிக்கிறவனை வச்சு வியாபாரம் பண்றவன் என்று கூறும் மகாதேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சக்தி சத்யமூர்த்தியை எப்படி சந்திக்கிறார், சக்தி வாய்ந்த வில்லனான மகாதேவை எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள...

தம்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
சினிமாவில் பல படைப்பாளர்கள் இருக்கிறார்கள். இதில் சிலரின் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியாக மலையாள சினிமாவின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தம்பி படம்  வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஹீரோ கார்த்தி கோவில் ஒரு திருடனாக சகல சகவாசங்களோடு வாழ்க்கையை ஜாலியாக கொண்டு போகிறார். ஒரு நாளை அவரை போலிஸ் துரத்த பின் வாழ்க்கையே மாறிப்போகிறது. ஊட்டியில் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என பிரபலங்கள் கூடி இருக்கிறார்கள். சத்யராஜின் மகன் சிறுவயதில் காணாமல் போக, 15 வருடங்கள் கழித்து கார்த்தியின் உருவில் மீண்டும் வீடு வந்து சேர ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் தம்பியை தொலைத்த சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் வந்துள்ள தம்பியை கொண்டாடமுடியாமல் திணறுகிறது அக்காவின் நெ...

காளிதாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
தற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல். இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் இதன் பின்னணியை கொண்டு காளிதாஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. சரி படத்திற்குள் போகலாமா? நடிகர் பரத் இப்படத்தின் ஹீரோவாக ஒரு போலிஸ் அதிகாரியாக வருகிறார். காளிதாஸ் கேரக்டரான அவருக்கு மனைவியாக அன் ஷீ ட்டெல். இருவரும் இடையே முகம் சுளிப்பு. குறிப்பாக அவரின் மனைவி வித்யாவுக்கு. காரணம் கணவர் தன்னை கண்டுகொள்ளாமல் வேலை வேலை என பிசியாக இருக்கிறார் என்பதே. இதற்கிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள். இறந்த மூவருமே பெண்கள். ஒரே மாதிரியான சம்பவங்கள்.கொலையா தற்கொலையா என பல கேள்விகள். இதனால் பரத் மற்றும் போலிஸ் குழு மிகவும் தீவிரமாக இந்த சம்பவத்தில் வி...

கேப்மாரி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
கேப்மாரி என்ற பெயரை கேட்டதும் பலருக்கும் என்ன இது?அப்படி என்ன இந்த படத்தில் என வித்தியாசமாக தோன்றும் தானே. அதுவும் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதே பார்வையுடன் கேப்மாரியை பார்ப்போம். படத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள். இருவரும்பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள். பின்ஜெய் அந்த பானத்தை அருந்தஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின்எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். உடனேதிருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்து காதலிக்க தொடங்குகிறார்கள். அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகை அதுல்யா. ஒருபக்கம்...

மாமாங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
மாமாங்கம் சேரர் காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடந்த ஒரு திருவிழா. இந்த திருவிழாவை மையமாக வைத்து எழுத நினைத்த கதைக்கு மாமாங்கம் என்று பெயரிட்டு. பதினேழாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும் Period Drama இந்த படம். Period படத்திற்கே உண்டான லாஜிக் பார்க்காதே கேள்வி கேட்காதே என்பதுபோல். படம் வரலாற்று ரீதியாகத் துல்லியமாக எடுக்கப்பட்டது அல்ல சினிமாவிற்காக எடுக்கப்பட்டது என்ற பொறுப்புத்துறப்புடன் ஆரம்பமாகிறது படம். இனத்தால் பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க. சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை மரணத்திற்குத் துணிந்த தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.  இம்முறை நடக்கும் மாமாங்கத்தில் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள ‘சாவேரி’ இனத்திலிருந்து உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் ஆகிய இருவரும் செல்கிறார்கள்.  உன்னி முகுந்தனுக்கு வசனம் அதிகம் தர...
மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

Latest News, Review
நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.. ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை. கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பிரபலமான ரவுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீ...

ஆதித்ய வர்மா திரை விமர்சனம் (4/5)

Review, Top Highlights
விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆதிய் வர்மா ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் என்பதால் த்ருவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போவாதவர்களே இந்திய சினிமாவில் இருக்க மாட்டார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன, ஆக்டிங்கில் வேற லெவல் அவுட்புட்டை த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலே கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் ஒரு பக்காவான ரீமேக் படம் என்றும், கோலிவுட்டில் கனவு கண்ணனுக்கு இருந்த வெற்றிடத்தை ஆதித்ய வர்மா அசால்ட்டாக நிரப்பியுள்ளார்.இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். படத்தின் முதல் பாதி சிறப்பா...

ஆக்ஷன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Review, Top Highlights
இயக்குனர் சுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்போம். விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்மாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார். அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர். இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அறிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக...