
மாமனிதன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
"அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அ...