சிம்புவின் “மஹா” பட ரீலிஸ்…. படக்குழு விளக்கம்
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.
இந்நிலையில், மஹா திரைப்படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யபட்டு விட்டதாகவும் இணைய வெளியிலும், ஊடகங்களிலும் தகவல் வெளியாகியன.
இந்நிலையில், மஹா படம் குறித்த உண்மை தகவல்களை Etcetera Entertainment நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மஹா படத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கபட...