Friday, May 1
Shadow

Tag: #விஷ்ணுவிஷால்

ஜகஜால கில்லாடியாக மாறிய விஷ்ணு விஷால்

ஜகஜால கில்லாடியாக மாறிய விஷ்ணு விஷால்

Latest News, Top Highlights
'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை எழில் இயக்கி வருகிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 'ஜகஜால கில்லாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை துஷ்யந்த் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக கே.ஜி.வெங்கடேஷ், இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார்கள். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதியுள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது....
பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

Latest News, Top Highlights
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக `கதாநாயகன்' படம் வெளியானது. இவர் தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கவுதம் மேனன் தயாரிப்பில் `பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இருந்து விலகுவதாக விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேதி பிரச்சனையால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் விளக்கம் அளித்திருக்கிறார். செந்தில் வீராசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருந்த அந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது....
விஷ்ணு விஷால் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்

விஷ்ணு விஷால் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்', `சீமராஜா' படங்களை தயாரிக்கும் 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிற...