தயாரிப்பு சங்க கோரிக்கை நிராகரித்த பேட்ட படக்குழு அஜித் ரஜினி நேரடி மோதல்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் பொங்கல் வெளியீடு என அறிவித்து, 'விஸ்வாசம்' படத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' மட்டுமே பொங்கல் வெளியீடாக அறிவித்திருந்தது. திடீரென்று 'பேட்ட' படக்குழுவினரின் அறிவிப்பால், விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் உண்டானது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பலரும் முறையிடத் தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்க இயலுமா என்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், பொங்கல் வெளியீட்டில் உறுதி, அதில் பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்தே பொங்கல் வெளியீட்டு படங்களில் தீர்மானிப்பதிலிருந்து விலகிக் க...







