Sunday, June 21
Shadow

Tag: #ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

Review, Top Highlights
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம். ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர். தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று...
4 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய விஜய் சேதுபதி!

4 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய விஜய் சேதுபதி!

Latest News, Top Highlights
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘ ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. வரும் வெள்ளியன்று படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும், கவுதம் கார்த்திக், காயத்ரி என சில முன்னனி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு நிறைய கெட்டப்கள் இருக்கும் என்று செய்தி வந்தது. ஆனால் அவை ஒரு பாடலுக்கான கெட்டப்புகள் மட்டுமே என அவர் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது, படத்தின் முக்கியமான காட்சியின் ஒரு பகுதியாக 4 நிமிட நீளமான வசனத்தை ஒரே டேக்கில் விஜய் சேதுபதி பேசி அசத்தியுள்ளதாகவும், இந்த 4 நிமிட வசனம் முழுவதும் திரையரங்கில் கைத்தட்டல் நிச்சயம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர்கள் நீளமான வசனம் பேசி கைத்தட்டல் வாங்குவது தமிழ் சினிமாவில் புதிதில்லை என்றாலும் விஜய் சேதுபதி பேசியிருப்பதாகக் கூறப்படும் 4 நிமிட வசனம் அவருக்கு முதல் முறையே. விஜய் சேத...
பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத விஜய் சேதுபதியை இந்த போஸ்டரில் காண முடிகிறது. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இந்த போஸ்டர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. மேலும் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன், ‘சீதக்காதி’ படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் என்று கூறினார். அதன்படியே ...