Thursday, September 10
Shadow

Tag: சித்ரா

சின்னக்குயில் சித்ரா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார். திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார். வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்...