Sunday, June 21
Shadow

Tag: #செல்பி

தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

Latest News, Top Highlights
ஹைதராபாத் ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் தனக்கென்று வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று திறந்து வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர், தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மஹரிஷி என்ற படத்திலும், எஸ்.எஸ்.எம்.பி26 என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகு சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபிவின் மனைவி நம்ரோதா ஷிரோத்கர், மகள் சித்தாரா கத்தாமனேனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்....
ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

Latest News, Top Highlights
நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் அசவுகரியங்கள் ஏற்படுவது உண்டு. ஆனாலும் அதை பொறுத்துக்கொண்டு அவர்களுடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தெலுங்கு நடிகை ஒருவர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்து எறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையின் பெயர் அனசுயா பரத்வாஜ். ஐதராபாத்தில் வசிக்கிறார். இவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷனில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தார்னா பகுதியில் ஒரு ரசிகர் அனசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த அனசுயா ரசிகரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி எறிந்து உடைத்தார். இதையடுத்து அனுசுயா மீது அந்த ரசிகரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நாயகி தான் அந்த போனை உடைக்கவில்லை என்று கூறிவருகிறார்....