Friday, April 17
Shadow

Tag: நடிகர்

சொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் பிரபல பாலிவுட் நடிகர்…!

Latest News, Top Highlights
நடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருப்பவர். அதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெறுகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது....

தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிக்கக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப் பாளர் போனி கபூர் அவரிடம் பேசிவருவதாகவும் ஆனால் அஜய்தேவ்கன் தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது. கமலின் ’இந்தியன் 2’...

நடிகர் கொத்தமங்கலம் சீனு மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
கொத்தமங்கலம் சீனு தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார். வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன. பின்னர் பாடகரும் நடிகருமான கொத்தமங்கலம் சுப்புவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார். இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் சாரங்கதாரா. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் தாசி அபரஞ்சி, பக்த சேதா, விப்ரநாராயணா போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகு...

நடிகர் ஆனந்த் பாபு பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
ஆனந்த் பாபு ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனந்த் பாபு 1985 டிசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நடித்த படங்கள்: ஆதவன், கொண்டாட்டம், சூரியன் சந்திரன், புத்தம் புதிய பயணம், சேரன் பாண்டியன், புரியாத புதிர், பந்தம்...

நடிகர் விஷால் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்ப...

நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அக்கினேனி நாகார்ஜூனா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்ப கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார். நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெல...

நடிகர் விஜயகுமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி என்ற பெண்கள் உள்ளனர். சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்ன...

நடிகர் பிரசன்னா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரசன்னா வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நடித்த படங்கள் :5 ஸ்டார், ரகசியமாய், காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சீனா தானா 001, சாது மிரண்டா, அஞ்சாதே, கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு! அச்சமுண்டு, நாணயம், கோவா, பாணா காத்தாடி, முரன்...

நடிகர் இளவரசு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பூவெல்லாம் உன் வாசம், பாண்டவர் பூமி, தவசி, ஷாஜகான், பகவதி அம்மன், யுனிவர்சிடி, மாறன், சுந்தரா டிராவல்ஸ், புதிய கீதை, பாய்ஸ், உன்னை சரணடைந்தேன், காதல் சடுகுடு, ஈர நிலம், பீஷ்மர், பல்லவன், ரகசியமாய், ஜெயம், நெறஞ்ச மனசு, சவுண்டு பார்ட்டி, அட்டகாசம், சிந்தாமல் சிதராமல், குத்து, சத்திரபதி, மகாநடிகன், ஆட்டோகிராப், மதுர, ஏய், கிரி, ஒரு நாள் ஒரு கனவு, மஜா, ஜீ, குருதேவா, தவமாய் தவமிருந்து, தம்பி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, குஸ்தி, டான் சேரா, ஒரு...

நடிகர் சுமன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்துவாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள்: வந்தா ராஜாவாதான் வருவேன், Mr.லோக்கல், உணர்வு, முத்துராமலிங்கம், நிபுணன், சவுக்கார்பேட்டை, ருத்ரமாதேவி...