Friday, April 17
Shadow

Tag: நடிகை

வயல்பகுதியில் அறுவடை செய்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை

வயல்பகுதியில் அறுவடை செய்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை

Latest News, Top Highlights
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமாமாலினி வயல்பகுதியில் அறுவடை செய்துக் கொண்டிருந்த உழைக்கும் பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஹேமா மாலினி தாமும் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. மதுரா தொகுதியில் இரண்டாவது கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது....
கவர்ச்சியாக நடிக்க தயார்: நடிகை அஞ்சலி

கவர்ச்சியாக நடிக்க தயார்: நடிகை அஞ்சலி

Latest News, Top Highlights
நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது திருமணம், கேரியர் மற்றும் வதந்திகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். திருமணம் குறித்து பேசிய அவர், நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும் என்றார். தனது கேரியர் குறித்து பேசிய அவர், நான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தன்னை பற்றி வரும் வதந்திகள் குறித்து பேசிய அவர், என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வரு...
ஆதிவாசி குழந்தைகள் கல்விக்காக ஸ்கூல் கட்டி கொடுத்த தமிழ் நடிகை

ஆதிவாசி குழந்தைகள் கல்விக்காக ஸ்கூல் கட்டி கொடுத்த தமிழ் நடிகை

Latest News, Top Highlights
நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை காஜல் அகர்வால், ஆந்திராவில் ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க இலவசமாக ஸ்கூல் கட்டி கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். அதையடுத்து தற்போது கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூக சேவை குறித்து அவர் தெரிவிக்கையில், நான் சமூக சேவைகளிலும் ஈடுபடுவதுடன், அதற்கு என் பணத்தை செலவிடுகிறேன் என்றார். மேலும் ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்து, நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்....

நடிகை மீனாகுமாரி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
மீனாகுமாரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தன் வாழ்நாளில் ஏறத்தாழ 92 படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தந்தை நாடகக் கவிஞராகவும் உருது மொழிப் புலவராகவும் விளங்கினார். இந்தி திரையுலகில் “சோகங்களின் அரசி” (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பத்து ஐந்து ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும். வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து கொள்வதற்குமுன் இக்பால்பேகம் என்ற பெயரி ல் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறி னார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும் பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ அருகி...

நடிகை ரக்ஷிதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மதுர படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் ரக்ஷிதா. தம் உள்பட மேலும் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய ரக்ஷிதா இப்போது கன்னட சேனல்களின் பிசியான தொகுப்பாளினியாகி விட்டார். ஈடிவியில் தகதிமிதா என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷிதா, தற்போது சுவர்ன டிவியில் புத்தனி பந்த்ரு என்ற சிறுவர்கள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பழம்பெரும் நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டரும், இயக்குனர் குருபிரசாத்தும் நடுவர்களாக இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் இதற்கான ஆடிசன் நடந்து வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஆடிசனில் 13 சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  ரக்ஷிதா விரைவில் தமிழ் சேனல்களுக்கும் வர இருக்கிறார். இவர் ந...

நடிகை ஜனனி ஐயர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜனனி ஐயர், ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார். அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார். எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார். இவர் நடித்த படங்கள்:  தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திரு திரு துறு துறு, பாகன், முப்பரிமாணம்பாலுன், விதி மதி உல்டா,  தொலைகாட்சி...

நடிகை சந்தோஷி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சந்தோஷி, மார்ச் 31, 1987இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். பாலா , ஜெய் மற்றும் ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார். மேலும் பிரதானமான தொலைக்காட்சித் தொடரான "அரசி"யில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. சந்தோஷி, கோபால கிருஷ்ணா மூர்த்தி மற்றும் தொலைக்காட்சி நடிகை பூர்ணிமா ஆகியோருக்கு இந்தியாவிலுள்ள சென்னையில் பிறந்தார். இவருக்கு எட்டு வயது இருக்கும்போது, இவருடைய தாயுடன் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பின்னர் பாபா (2002) படத்தில் அறிமுகமானார். இதில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில், மனிஷா கொய்ராலாவின் சகோதரியாக நடித்தார். அதன்பிறகு, ஆசை ஆசையாய் (2002), பாலா (2002), மாறன் (2002) மற்றும் இராணுவம் (2003) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு சமுத்திரகனியின் உன்னை சர...

நடிகை சி. கே. சரஸ்வதி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. கே. சரஸ்வதி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் படங்களில் வில்லியாக கொடுமைக்கார மாமியாராக, அத்தையாக நடித்தாலும் சிறந்த குணசித்திர, நகைச்சுவை நடிகையும் கூட என்றும் சிலப்படங்களில் நிரூபித்துள்ளார். ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, ப...

நடிகை அனன்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர் (Ayilya Nair), மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை. இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார். இவர் நடித்த படங்கள்:  இரவும் பகலும் வரும், புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன், நாடோடிகள்...

நடிகை அனு இம்மானுவேல் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனு இம்மானுவேல் ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார். உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது கலைத் துறையில் ஏதாவது ஒன்றைத் தொடர வேண்டும் என்று அனு அறிந்திருந்தார். உயர்நிலைப் பள்ளியில் அவரது முதல் வருடத்தில் துல்கர் சல்மானுடன் சார்லீ படத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்தார். ஆனால் இறுதி தேர்வுகள் காரணமாக அவர் திரும்பப் பெற வேண்டியிருந்தது. நிவின் பாலி...