Saturday, December 10
Shadow

நடிகை ரக்ஷிதா பிறந்த தின பதிவு

மதுர படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் ரக்ஷிதா. தம் உள்பட மேலும் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய ரக்ஷிதா இப்போது கன்னட சேனல்களின் பிசியான தொகுப்பாளினியாகி விட்டார். ஈடிவியில் தகதிமிதா என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷிதா, தற்போது சுவர்ன டிவியில் புத்தனி பந்த்ரு என்ற சிறுவர்கள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பழம்பெரும் நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டரும், இயக்குனர் குருபிரசாத்தும் நடுவர்களாக இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் இதற்கான ஆடிசன் நடந்து வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஆடிசனில் 13 சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  ரக்ஷிதா விரைவில் தமிழ் சேனல்களுக்கும் வர இருக்கிறார்.
இவர் நடித்த தமிழ் படங்கள் : தம், மதுர
இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய படம்: வில்லன் (நடிகை எமி ஜாக்சன்க்காக)