Friday, April 17
Shadow

Tag: நடிகை

நடிகை எம். வி. ராஜம்மா பிறந்த தின பதிவு

நடிகை எம். வி. ராஜம்மா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். வி. ராஜம்மா பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில...

நடிகை ஜெய பாதுரி பச்சன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இவர் இந்தித் திரைப்பட நடிகை மற்றும் அரசியலாளர் ஆவார். சிறந்த  நடிகை எனப் பாராட்டப்பட்டு 8 பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.  2007 ஆம் ஆண்டில் பிலிம்பேர் வாணாள் சாதனை விருது  இவருக்கு வழங்கப்பட்டது. 1992 இல் பத்மசிறீ விருது பெற்றார். இவர் இந்தியாவில், மத்திய பிரதேசத்தில் உள்ள சபல்பூரில் இந்துக்  குடும்பத்தில் பிறந்தார். போபாலில் தூய சூசையப்பர் கான்வென்ட் பள்ளியில் படித்தார். தமது 15 ஆம் வயதில் சத்யஜித் ராய் இயக்கிய  மகா நகர் என்னும் வங்கத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.  1966 இல் குடியரசு நாள் விழாவில் இவருக்குச் சிறந்த என்.சி.சி விருது  வழங்கப்பட்டது. உபகார், கோசிஸ், கோரா காகஸ், சஞ்சிர், அபிமான், சுப்கே சுப்கே, மிலி,  சோலே ஆகிய திரைப்படங்கள் செய பச்சன் நடித்தவற்றில் பேர்  பெற்றவை ஆகும். சிறந்த நடிகைக்கான 8 பிலிம்பேர் விருதுகள் பல  இவருக்குக் கிடைத்தன. குழந்தைகள் திரைப்பட சொசை...

நடிகை சுவாதி ரெட்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுவாதி ரெட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மா  தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்  பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின்  மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். தொலைக்காட்சித்  தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக்  கொண்டார். இவர் பிலிம்பேர் விருது மற்றும் நந்தி விருது  ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜல்சா என்னும்  தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நடித்த படங்கள்: யாக்கை, திரி, யட்சன், வடகறி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா, போராளி, கனிமொழி...

நடிகை கோவை சரளா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ...

நடிகை சுஜாதா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுஜாதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதா, 1952 திசம்பர் 10 இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். சுஜாதா, 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்...

நடிகை லிசா ரே பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லிசா ரே ஒரு கனடிய நடிகை மற்றும் முன்னாள் ஆடை அலங்கார மாடல் ஆவார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சிகிச்சையின் முதல் சுழற்சி 2 ஜூலை 2009 அன்று தொடங்கியது. கனடாவின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு பெங்காலி தந்தை மற்றும் பூலிஷ் தாயாருக்கும் லிசா ரே பிறந்தார். மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான எடோபிகோக்கில் வளர்ந்தார். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார். லிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது சினிமாவில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்பட...

நடிகை சிம்ரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ள...
எழில்-ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைக்கிறார் நடிகை ஈஷா ரேப்பா

எழில்-ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைக்கிறார் நடிகை ஈஷா ரேப்பா

Latest News, Top Highlights
பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் இந்த நிறுவனம். எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகின்றனர். சி.சத்யா இசையமைக்கும் இந்தப்படத்தின் நாயகியாக ஈஷா ரேப்பா நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது. எழில் வேலைன்னு வந்தா வெளைக்காரன் மற்றும் சரணவன் இருக்க பயமேன் ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தை ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் டோலிவுட் நடிகை ஈஷா ரேப்பா முக்கிய வேடத்தில் நடக்க உள்ளார். தமிழ் படமான 'ஒய்' படத்திற்கு பின்னர் நடிகை ஈஷா ரேப்பா நடிக்கும் இரண்டாவது படமாகும். இந்த படத்தில் நடிகர் சதீஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா மற்ற...

நடிகை ஜெயபிரதா பிறந்த தின பதிவு

Birthday, Latest News
ஜெய பிரதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி. ஜெய பிரதா, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் இராஜமுந்திரியில் ஒரு நடுத்தர-வர்க்க குடும்பத்தில் லலிதா ராணியாகப் பிறந்தார். அவருடைய தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட பண முதலீட்டாளர். அவருடைய தாய் நீலவாணி ஜெயபிரதாவை இளம் வயதிலேயே இசை மற்றும் நாட்டிய வகுப்புகளில் சேர்த்துவிட்டார். பதினான்கு வயதாக இருக்கும்போது அவர் தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். பார்வையாளர்களில் ஒரு திரைப்பட இயக்குனரும் இருந்தார். அவர் ஜெயபிரதாவிற்கு தெலுங்கு திரைப்படமான பூமிகோசம்-இல் மூன்று நிமிட நடன ஆட்டத்தை வழங்கினார். அவருக்குத் தயக்கமாகவே இருந்தது ஆனால் அவருடைய குடும்பம் அதை ஏற்றுக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தியது. அந்தத் திரைப்படத்திற்கு அவருக்கு வெறும் 10 ரூபாய்கள் வழங்கப்பட்டது ஆனாலும் தெலுங்கு திரைப்படத் துறையின் மிகப் பிரபலங்களுக்...

நடிகை எம். சரோஜா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். சரோஜா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், பூலோக ரம்பை, அரசிளங்குமரி, வண்ணக்கிளி, தேன் நிலவு, திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா ஏ...