நடிகர் பப்லு பிரித்திவிராஜ் பிறந்த தின பதிவு
பப்லு பிரித்திவிராஜ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப...
