Wednesday, October 28
Shadow

Tag: பின்னணிப்

பின்னணிப் பாடகர் கிரிஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும். வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன....
பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தின பதிவு

பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார். இவர் நடித்த படங்கள்: கபாலி, பழைய வண்ணாரப்பேட்டை, மெட்ராஸ், யான், வடகறி, நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே...
பின்னணிப் பாடகி சுவர்ணலதா பிறந்த தின பதிவு

பின்னணிப் பாடகி சுவர்ணலதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுவர்ணலதா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உய...

பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுஜாதா மோகன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 4000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார். சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963 ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார். 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இவர் பெற்ற பெற்ற விருதுகள் 2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும், 1996-ல் ‘...