நடிகர் பிரேம் நசீர் பிறந்த தின பதிவு
மலையாள நடிகர் என்றாலும், பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் பிரேம் நசீர். அவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தி, ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அவர் மொத்தம் 480 படங்களில் கதாநாயகனாக நடித்தது முதல் சாதனை. நடிகை ஷீலாவுடன் மட்டும் 101 படங்களில் ஜோடியாக நடித்தது, அடுத்த சாதனை. இவை இரண்டும், ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்ற சாதனைகள்.
இவை தவிர, மேலும் சில சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். இவர் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகிகள் மொத்தம் 80 பேர்! ஒரே வருடத்தில் (1979) இவர் நடித்து வெளிவந்த படங்கள் 29.
ரேம் நசீர், 1929–ம் ஆண்டு ஏப்ரல் 7–ந் தேதி கேரளாவில் உள்ள செரியன்கேழு என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் சாகுல் ஹமீது. தாயார் அஸ்மா பீவி.
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் காதர். இவர் சிறுவனாக இருக்கும் போதே, தாயார் இறந்து விட்டார். கல்லூரியில் படித்து ‘பி.ஏ.’ பட்டம் பெற்ற பிரே...
